|
பொ-ரை: பார்த்துப் பாசம் பிடித்தெழுந்த எமதூதுவர் கூரிய வேலாற்குத்தி வருத்துவதன் முன்பே, ஆரவாரித்த கங்கையைச் சடையில் அடக்கும் வாட்போக்கி இறைவர் புகழ்த்தன்மைகளை உள்ளம் கிளர்ந்து உரைப்பீராக. கு-ரை: பார்த்து - வாழ்நாள்களைக் கணக்கிட்டுப்பார்த்து. பாசம் - கயிறு. கூர்த்தவேலால் - கூரிய சூலத்தால். குமைப்பதன் முன் - அழிப்பதற்கு முன்பே. ஆர்த்த - ஆரவாரித்துவந்த. அடக்கும் - சடையின்கண் கொண்டு அதன் வேகத்தைக் குறைத்த. கீர்த்திமைகள் - புகழ்கள். கிளர்ந்து - விரித்து. |