பாடல் எண் : 87 - 2
துன்னு வார்குழ லாளுமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின வோயுமே
.
2
பொ-ரை: நெருங்கிய நீண்ட கூந்தலை உடைய உமாதேவியோடு கூடியவரும், பின்னிய நீண்ட சடைமேற் பிறையை வைத்தவரும் ஆகிய நிலைபெற்ற நீண்ட புகழை உடைய திருமணஞ்சேரியில் மருந்தாம் பெருமானை உள்ளத்தே உன்னவார்களின் வினைகள் ஓயும்.
கு-ரை: துன்னு - நெருங்கிய.வார் - நீண்ட. குழலாள் - கூந்தலை உடையவளாகிய. பின்னு - ஒன்றோடொன்று பின்னிய. மன்னுவார் - எழுந்தருளியவராகிய. மணஞ்சேரி மருந்தினை - திருமணஞ்சேரியில் எழுந்தருளிய மருந்து போல்வானை. உன்னுவார் - நினைப்பவர்கள். வினையாயின - பழவினைகளானவை. ஓயும் - ஒழியும்.