|
பொ-ரை: துள்ளும் மான்குட்டியையும், தூய மழு வாளினையும் உடையவரும், சடைமேற் கங்கையை மறைத்தவரும் ஆகிய சேறு நிறைந்த வயல் சூழ்ந்த மணஞ்சேரியில் உறையும் வள்ளலார் கழல்களை வாழ்த்தலே வாழ்வாவது. கு-ரை: துள்ளும் - துள்ளிச்செல்லும். மான்மறி - மான்குட்டி. தூமழுவாள் - தூயமழுவாகிய வாள். வெள்ளநீர் - வெள்ளமாக வந்த கங்கை நீரை. கரந்தார்- மறைத்துவைத்தார். சடைமேல் அவர் எனப் பிரிக்க. அள்ளல்ஆர் - சேறு பொருந்திய. வாழ்த்தலே வாழ்வு ஆவது என்க. |