பாடல் எண் : 87 - 8
துன்ன வாடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர
் மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.
8
பொ-ரை: பின்னிய நூலாடையினரும், தூயமழு வாளினரும், பின்னிய சிவந்த சடையின்மேல் பிறை வைத்தவரும் ஆகிய, நிலைபெற்ற நீண்ட பொழில்கள் சூழும் மணஞ்சேரி உறையும் மன்னனார் கழலே தொழ வாய்ப்பாவது.
கு-ரை: துன்ன ஆடையர் - ஆடை உடுத்தியவர். தூமழுவாளினர் - தூய மழுவாகிய வாளை உடையவர். பின்னு - பின்னிய. மன்னு - நிலைபெற்ற. வார் - நீண்ட. மன்னனார் - தலைவனார். கழலே - திருவடிகளையே. தொழ - வணங்க. வாய்க்கும் - நமக்கு வேண்டுவன எல்லாம் உண்டாகும்.