|
பொ-ரை: ஆதியிற்றோன்றிய திருக்கயிலாயத் திருமலையினை அன்று எடுத்தவனாகிய இராவணன் தலை இற்றுச் "சோதியே" என்று கூறுதலும், பழைய அருள் புரிந்திடும் ஆதியானாகிய மருகற்பெருமான் திறத்தையே ஓதி வாழ்பவர் தேவர்க்கும் தேவராவர். கு-ரை: ஆதி - முதன்மையான. மாமலை - பெருமைக்குரிய திருமலை. அன்றெடுத்தான் - தான் வாகீசராய் வலம்வந்த அக்காலத்துத் தூக்கியவன். இற்று - அங்கங்கள் நெரிந்து. சோதி - ஒளி வடிவானவனே. உம்பர்க்கும் உம்பர் - தேவர்களால் வணங்கப்படும் தேவர். |