|
பொ-ரை: கோபத்தினால் வருகின்ற செய்யப்படுவதான தொழில்களாகிய பிற தீச்செயல்கள் அனைத்தையும் நீங்கி நின்று ஆதரவாகி உள்ளத்தினால் மருகல் பெருமானாகிய இறைவன் திறத்தை நினைப்பவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை. கு-ரை: சினத்தினால் - கோபம் முதலியவைகளினால். வரும் - உண்டாகும். செய்தொழிலாமவை அனைத்தும் - தீக்குணங்களால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும். மிக ஆதரவாய் - மிக்க அன்பாய். திறம் - தன்மை. நினைப்பார்க்கு - நினைப்பவர்களுக்கு. நீள் நில வாழ்க்கை இல்லை - வீடு பேற்றின்கண் வாழ்தல் உண்டாம். |