|
பொ-ரை: பெண்களே! தன் சங்கு வளையல்கள் நெகிழவும், உடை சரியவும் இம்மங்கைதான், மருகல் இறைவன் திருவீதியுலாவருகின்ற அங்க வீதியின் அருகு நாளும் அணைந்து நிற்பாள்; நான் இதற்கு என்னசெய்வேன்? கு-ரை: சங்கு - சங்கினால் அறுத்துச்செய்த வளையல்கள். சோர - கழன்றுவிழ. கலை - ஆடை. சரிய - இடையினின்றும் அவிழ. மங்கை - மருகற்பெருமான் மேல் காதல் கொண்ட அம்மங்கை. வரும் - உலாவரும். அங்கவீதி - பிரதானத்திருவீதி. அருகு - சமீபத்தில். அணையாநிற்கும் - நெருங்கிவரும். நாளும் - நாடோறும். ஏ - அசை. நங்கைமீர் - தோழியர்களே. |