பாடல் எண் : 88 - 7
காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே
.
7
பொ-ரை: என் பெண் மாட்சிகள் நிறைந்த மருகற்பெருமானுக்கு மனம் தாழும் விருப்பம் மிகவும் உண்டாயினள்; அவனைக் காணும் காட்சியைப் பெற்றிலள் ஆயினும் காதலினின்று மீளுகைக்கு ஒன்றும் அறியாதவள் ஆகி அவ்விருப்பமே மிகுந்தது.
கு-ரை: காட்சி பெற்றிலளாயினும் - கண்களால் காணும் வாய்ப்பைப் பெறாவிட்டாலும். காதல் - ஆசை. ஏ - அசை, மீட்சி ஒன்றறியாது - மீளும் வழி ஒன்றையும் அறியாமல். மிகுவதே - பெருகுகின்றதே. மாட்சி - நற்குண நற்செயல்கள்; உடையவர் வாழும் மருகல் என்க. மாட்சியாராகிய மருகற்பெருமான் எனலுமாம். தாழ்ச்சி - விருப்பம். சால உண்டாகும் - பெரிதும் உண்டாகும். என்தையல் - என்பெண்.