|
பொ-ரை: அளவற்ற பெருமையன். சிவகணங்கள் பல்லாயிரவரை உடையவன். அடியவர் உள்ளங்களையே தங்குமிடமாகக் கொண்டவன். கு-ரை: பத்து நூறவன் - பத்து என்றும் நூறென்றும் கூறும்படிப் பல பொருளாயுள்ளவன்; பத்தியான். பத்து என்றும் நூறு என்றும் சொல்லும் சிலவும் பலவுமாய சடைகளையுடையவன் ஆயிரம் என்றலுமாம். அடியவர்க்கு உள்ள பத்து இலக்கணங்கள் (உபதேசகாண்டம் பார்க்க). பள்ளி - உள்ளத்தை. பத்தியான் - பத்தி வலையிற் படுவானாய இறைவன். இடங்கொண்டது - தமக்குரிய இடமாகக் கொண்டது. ஞானத்தால் - என் அறியாமையை உணர்ந்து அருளியதால். |