|
பொ-ரை: எம் உள்ளத்துறையும் முதல்வனாகிய பெருமான், ஆறு கால்களையுடைய வண்டு ஒலிக்கும் கொன்றையை உடையவன்; கங்கையாற்றைச் சடையிற் சூடிய அண்டங்களுக்கெல்லாம் முதல்வன்; கூரிய அறிவுடைய அறுவகைச் சமயத்தார்க்கு அச்சமயப் பொருளும் நெறியும் ஆயவன். கு-ரை: ஆறுகால்வண்டு - ஆறுகால்களையுடைய வண்டு. மூசிய - மொய்த்த. ஆறு - கங்கை. ஆறுகூர்மையர் - கூரிய அறிவைத் தருகின்ற ஆறு சாத்திரம். சமயப்பொருள் ஆறு - ஆறு சமயத்தவர் பொருள்போல் இருப்பவன். "அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்" (சிவஞானசித்தி - சுபக்கம்.1) |