|
பொ-ரை: ஏழுமலை ஏழுபுவனம் ஏழ்கடல் போற்றும் இராவணனது ஏழிசைகேட்டு அருள்செய்தவன். அவன் திருவடிகள் எழுபிறவிகளிலும் என்னுள்ளத்தின்கண்ணே உள்ளன. கு-ரை: ஏழுமாமலை - கயிலை தவிர்ந்த ஏழுமலைகள். பொழில் - தீவு. கடல் ஏழு - பாற்கடல் முதலியன. நரம்பு ஏழு - ஏழு (சப்த) சுரங்கள். ஏழும் சூழ் - ஏழ்பிறப்பிலும். |