|
பொ-ரை: ஊர்க்குப் புறத்தே உள்ள நீரின் அருகெல்லாம் புன்னையும் ஞாழலும் பொருந்தியதும், மன்னுதலுற்ற நல்லடியார் வலங்கொள்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! அன்னமென்னடையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக்கொண்டு நீர் உகப்பதாகிய செல்வம் சின்னமாகிய உமது வேடமே.கு-ரை: புன்னை - புன்னைமரங்கள். ஞாழல் - சுரபுன்னை. புறணியருகெலாம் புன்னை ஞாழல் இவற்றையுடைய மறைக்காடு என்க. மன்னினார் - புகழால் நிலை பெற்றவர். வலங்கொள் -வலம் செய்யும். அன்னமெல் நடையாள் - அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடையவளாகிய பார்வதி. சின்னவேடம் - அடையாளமாகிய திருவேடம்; அவை திருநீறு அக்கமணி முதலியவை. (நீர்) உகப்பது (ஆகிய) செல்வம் சின்னமாகிய வேடமே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக. சிவசின்னங்களே மேலான செல்வம்; அவற்றையே இறைவர் உகப்பது என்றபடி. |