|
பொ-ரை: நெய்தலும் ஆம்பலும் நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ளதும், மெய்யன்பினார் வலம் கொள்வதும் ஆகிய மறைக்காட்டுறையும் பெருமானே! பெண்ணொருபாகம் கொண்ட தேவரீர், கவர்த்த புன்சடையில் வருத்தமுற்ற பிறையை அதனை விழுங்கக் காத்திருக்கும் பாம்புடன் ஒருங்கு வைத்தருளியது என்னையோ? (நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினால் முதல்வனைச் சாரும் போது நலிவும் மெலிவும் இல்லையாகும் என்பது கருத்து). கு-ரை: நெய்தலும் ஆம்பலும் நிறையும் வயல் என்க. இதனால் வயல்களின் சேற்றுவளங் கூறப்பட்டது. மெய்யினார் - மெய்ப்பொருளைத் தலைப்பட்டு உணர்ந்தோராய `செம்பொருள் கண்டார்ழு. கவர் புன்சடை - கிளைத்த மெல்லிய சடை. பைதல் - துன்பம். |