|
பொ-ரை: பூக்களைக் கையிற்கொண்டு சிவபிரானின் பொன்னார் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும், நாவினைக் கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவுதேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர். கு-ரை: பூக்கைக்கொண்டு என்க. பொன்னடி - பொன்னைப் போலப் பொதிதற்குரிய திருவடி. நாக்கைக்கொண்டு - நாவைக் கொண்டு என்க. நாமம் - இறைவன் திருப்பெயர். நவில்கிலார் - கூறாதவர்கள். ஆக்கைக்கே - உடலுக்கே. இரை - உணவு. அலமந்து - வருந்தி. காக்கைக்கு - காகங்களுக்கே. இரையாகி - உணவாகி. கழிவர் - அழிந்தொழிவர். |