|
பொ-ரை: நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைபவர் நெஞ்சுளே புகுந்து நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன், பொய்ம்மையாளர் பூசையிற் பூவையும் நீரையும் கண்டு அவர் தம்மை நாணிச் சிரித்து நிற்பன். கு-ரை: நெக்கு நெக்கு -மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து. உருகி உருகி என்க. நெஞ்சுள் - மனத்தினுள்ளே. புக்கு நிற்கும் - புகுந்து எழுந்தருளியிருக்கின்ற. பொன்னார்சடை - அழகு பொருந்திய சடை, பொக்கம் - பொய். அவர்தம்மை - அவரை நாணி - வெட்கமடைந்து. நக்குநிற்பர் - ஏளனநகை புரிந்திருப்பர். |