|
பொ-ரை: மற்றும் கேட்பீராக; மனத்திலே வேறொன்றும் தாங்குதலின்றி மேனிமுழுதும் பூசிய திருநீற்றொடு கோவணமும் கொண்டு ஒப்பற்ற தனி இடபத்தை உடைய இறைவன் திருவடிகளே அல்லால் வேறு பற்று ஒன்றும் இல்லாதவர்களாகிய அடியார்கள்மேல் படைகொண்டு போகவேண்டா. கு-ரை: மற்றும் - வேறொன்றும். மனப்பரிப்பு - மனத்தில் பிறிது ஒரு நினைப்பு. சுற்றும் பூசிய - உடல் முழுதும் பூசிய. பற்றொன்று இல்லி கள்மேல் - இறைவனையன்றிப் பற்றுக்கோடு இல்லாதவர்களிடத்தே ஆசையெனலுமாம். படைபோகல் - படைகொண்டு செல்லாதீர்கள். |