|
பொ-ரை: இராவணனை நெரித்த பெருமானது அடியவர்களைவிட்டு அகலுங்கள்: நீங்கள் ஏதேனும் இடையூறு செய்யமுயன்றால் அவன் திருவடி சுடும். கு-ரை: ஈரைந்தலை - பத்துத்தலை. ஓர்தாளினால் - ஒரு திருவடி விரலால். சுருக்கு - பாசத்தால் பிணித்தல். நெருக்கி ஊன்றி இட்டான் - மலையின்கீழ் அகப்படச்செய்து ஊன்றி வருத்தியவன் தமர் - அடியார். நிற்கிலும் - நின்றாலும். சுருக்கெனாது - விரைவாகப் போதல் இன்றி. சுருக்கெனில் - உமது தொழில்களில் ஏதேனும் செய்ய முயன்றால். சூடும் - சுடும் என்பது நீண்டது. திருவடியை நினைப்பித்தவாறு. |