|
பொ-ரை: அஞ்சியும் அன்புசெய்தும் இறைவனிடத்து அன்புடையவராய் ஈகை செய்யும் அடியவரைத் துன்புறுத்தாது அகலுங்கள். கு-ரை: நடுக்கத்துள்ளும் - அச்சத்திலும் அன்பிலும் வாழ்க்கையில் ஏற்படும் எத்தனையோ நடுங்குதற்குரிய துன்பக் காலத்தின் கண்ணும். நகையுளும் - உலகவர்கள் ஏளனம் செய்து நகைத்த இடத்தும். நம்பர்க்கு - இறைவனுக்கு. கடுக்க - ஒப்ப. பெருமானது திருநடனத்தின்போது அடிக்கப்படும் பறையினை ஒப்ப. கல்லவடம் - மணிமாலைபோன்ற உருத்திராக்க மாலை. பறை எனினுமாம். இடுவார்கட்கு - அணிவார்கட்கு அல்லது கொட்டுபவர்களுக்கு. கொடுக்க என உரைப்பார்களைக் கொள்க என உரைப்பவர்களைக் கொடுக்கும்படிச் சொல்லியவர்களையும் கொள்க என்று கொடுத்தவர்களையும். இடுக்கண் செய்யப்பெறீர் - துன்பம் செய்யாதீர்கள். இங்கும் நீங்குமே - இவ்விடத்தை விட்டும் நீங்குக. |