|
பொ-ரை: வித்தையாவதும், விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே; அச்சம் கொண்டு, பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக. கு-ரை: விச்சை - வித்தை, ஞானம், கல்வி, வேட்கைமை - பக்தி. விரும்புந்தன்மை. நிச்சல் - நாடோறும். நினைப்பதே - சிந்திப்பதேயாகும். அச்சம் எய்தி - பயமெய்தி. அருகணையாது - பக்கம் செல்லாமல். நீர் - நீங்கள். பிச்சை புக்கவன் - பிக்ஷாடனராய பெருமான். பேணும் - விரும்பி வழிபடுங்கள். |