பாடல் எண் : 92 - 9
இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.
9
பொ-ரை: இன்னும் கேட்பீராக; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா.
கு-ரை: இன்னம் கேண்மின் - இன்னமும் கேளுங்கள். மனத்துடன் - நிறைந்த மனத்தோடு. ஏத்துவார் - வணங்குபவர்கள். மன்னும் - என்றும் நிலைத்து நிற்பதாகிய.
மந்திரந்தன்னில் - மந்திரத்தில். ஒன்று வல்லாரையும் - ஓரெழுத்து வல்லவர்களையும். சாரல் - அடையாதீர்கள்.