|
பொ-ரை: உறங்கும் போதும் சுடர்விடும் சோதியும், நெஞ்சத்துக்குள் நிலைத்து நின்று நினைக்கவைக்கும் நீதியும், ஆலகாலவிடத்தைத் திருக்கழுத்துள் அடக்கிய நம்பனுமாகிய பெருமானை வஞ்சனை உடைய யான் இனி மறக்கும் வல்லமை உடையேனோ? கு-ரை: துஞ்சும்போதும் - உறங்கும்பொழுதும். சுடர்விடு சோதியை - உள்ளத்தில் ஒளிவிடும் விளக்கை. நெஞ்சுள் நின்று - மனத்தில் எழுந்தருளியிருந்து. நினைப்பிக்கும் - என் செயலன்றி அவன் செயலாய்ப் பல்வகை நினைப்புக்களையும் உண்டாக்கும் நீதியை - நீதியின் வடிவானவனை. |