|
பொ-ரை: மெய்ஞ்ஞானத்து அடியேனை விட்டவனும், மெய்ப்பொருளைக் காட்டியவனும், உமாதேவியினிடத்து அன்பு பொருந்தியவனும், பகைத்தவராகிய திரிபுராதிகள் முப்புரங்களைச் சுட்டவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. கு-ரை: மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள் விட்டிட்டானை - பரஞானமாகிய உண்மைப்பொருளை வெளிப்படுத்தியவனை. கட்டிட்டான் கனங்குழைபால் - கனவிய குழையினை உடையவளாய பார்வதியினிடத்து. கனங்குழைபால் கட்டிட்டு - பார்வதியினிடத்துக் கட்டுண்டு. அன்புபட்டிட்டானை - அன்பால் பிணிக்கப்பட்டவன். முப்புரம் சுட்டிட்டானை - பகைவரது திரிபுரங்களைச் சுட்டெரித்தவனை. |