பாடல் எண் : 94 - 2
முத்தொப் பானை முளைத்தெழு கற்பக
வித்தொப் பானை விளக்கிட் நேரொளி
ஓத்தொப் பானை யொளிபவ ளத்திரள்
தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.
2
பொ-ரை: முத்து ஓப்பவனும், முளைத்தெழுகின்ற கற்பகவித்துப் போல்வானும், திருவிளக்கிடை நேர்கின்ற ஓளியை ஓத்திருப்பவனும், ஓளியையுடைய பவளத்திரளின் கொத்தினை ஓப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக.
கு-ரை: முளைத்தெழு - முளைத்துத் தோன்றும. விளக்கிடை நேரொளி ஓத்தொப்பானை - விளக்கையும் அதனிடை ஓளியையும் ஓப்பவனை. பவளத்தின் தொத்து - பவளங்கள் தரண்ட கொத்து. தொழற்பாலது - தொழுந்தன்மையை உடையவன். தொத்து - திரட்சி.