|
பொ-ரை: விடலைப்பருவம் உடையவனும், மணங்கமழும் கொன்றைமாலை உடையவனும், பலிபெறுதற்காகத் திரிதமுசெல்லும் துன்பம் உடையவனும், நரிகள் பிரிந்துசெல்லாத சுடுகாட்டில் இருப்பவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக. கு-ரை: விடலை - ஆண்மக்களிற் சிறந்தவன். விரை - மணம். படலை - மாலை. பலிதிரிவான் - பிச்சையேற்றுத் திரிவதற்காக. நடலையான் - நடிப்புடையோன். நரி பிரியாததோர் சுடலை - நரிகள் கூடியிருக்கம் இடுகாடு. |