|
பொ-ரை: உலகமாகி உள்ளவனும், நல்லவனும், வல்லவர் தொழும் கோலத்தை உடையவனும், கணமாகிய பெருங்குன்றானவனும், மூலமாக உள்ளவனும், முதல்வனும், மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. கு-ரை: நல்லான் - நன்மையின் வடிவானவன். வல்லார் -அநுபூதியில் வல்லவர்கள். மூலத்தானை - எல்லாவற்றிற்கும் மூலப்பொருளாய் உள்ளவனை. |