|
பொ-ரை: முதற்கண்ணே தோன்றிய அட்ட மூர்த்தியும், பஞ்சகவ்வியம் அபிடேகம் கொள்பவனும், நமது மேல்வினைகள் வெந்து நீங்கும்படிக் கடைக்கண் சாதிப்பவனும், தவத்திடை மாற்றங்கள் தந்து சோதிப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. கு-ரை: ஆதிப்பால் - முதன்மைப் பகுதியான. அட்ட மூர்த்தியை - எட்டு வடிவங்களாயிருப்பவனை. நம்மேல் வினை வெந்தற வேதிப்பான் என்க. வேதித்தல் - அறிவித்தல். விரும்பு தவத்திடை சாதிப்பானை - நம்மைத் தவத்தின்கண்ணே நிறுத்துபவன். சாதித்தல் - முடித்தல். மாற்றங்கள் - நாம் செய்யும் தவறுகள். சோதிப்பான் - ஆராய்ந்து களைபவன். |