பாடல் எண் : 96 - 2
முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
டக்க ணம்மரை யாயரு ளேயலா
தெக்க ணும்மில னெந்தை பிரானிரே.
2
பொ-ரை: எந்தை பெருமானே! முக்கண்ணும் உடையாய்! முனிவர்கள் பலர் கூடி எண்ணித் தியானிக்கும் கழலை உடையாய்!புலித்தோலினோடு அழகிய நினது அருளேயல்லாது வேறு எவ்விடத்தும் பொருள் இல்லேன்.
கு-ரை: முக்கணும் உடையாய் - மூன்று கண்களை உடையவனே. முனிகள் பலர் - முனிவர்கள் பலர். தொக்கு எணும் கழலாய் - கூடி எண்ணும் திருவடிகளை உடையவனே. தோலினோடு - புலித்தோல் உடையோடு. அக்கு அம் அண் அரை - அக்க மணிமாலை நெருங்கிய அழகிய இடை அருளே அலாது - கருணையே வடிவாய் இருப்பானேயல்லாமல். எக்கணும் - எவ்விடங்களிலும். இலன் - கருணை வடிவின்றி வேறு வடிவு இலனாஆய எந்தை பிரானிரே என்க.