|
பொ-ரை: எந்தை பெருமானே! விளங்குகின்ற சுடர் சூழ்கின்றவனோடு நாள்தோறும் நிகழும் ஒள்ளிய பொருளாயின நீதிகளை என்னே புகழுமாறு! அல்லது உன் பொன்னடிகளை இகழுமாறு இல்லேன். கு-ரை: திகழும் - விளங்கும். சூழ்சுடர் - சூழ்ந்த ஒளியோடு கூடிய சூரிய சந்திரர்களை (உடையதான). வானொடு - ஆகாயத் தோடு. நிகழும் - உலகின்கண் இயங்குகின்ற. ஒண்பொருளாயின - சிறந்த பொளாயுமிருப்பன. சூரிய சந்திராகியும், ஆகாயமாகியும், உலகப் பொருளாயும் இருப்பவன். விண்ணும் மண்ணுமாயிருப்பவன் என்க. புகழும் ஆறு அலால் - புகழ்வதையன்றி. நுன் பொன்னடி - உனது அழகிய திருவடி. |