|
பொ-ரை: சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும், சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும், அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர். கு-ரை: சிந்திப்பார் - தன்னை நினைப்பவர்கள். செஞ்சுடர் அந்திவான் - சிவந்த ஒளியோடு கூடிய அந்திக்காலத்து வானம். அணியார் - அழகு பொருந்திய. முந்தி - முற்பட அல்லது தலையிலே. வந்திப்பார் - வாழ்த்துபவர்கள். |