பாடல் எண் : 97 - 13
ஒளவ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மொளவர் நீண்மலர் மேலுறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே.
13
பொ-ரை: அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக. மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள்.
கு-ரை: ஒளவ தன்மையவரவர் - அந்தந்தத்தன்மையையுடையவர் வெவ்வதன்மையன்-கொடியவன் என்பது ஒழிமின் - என்ற கூறுவதைத் தவிருங்கள். மொளவல் நீள்மலர்மேல் உறைவான் - தாமரை மலரில் உறையும் பிரமன் முல்லை போலும் வெண்டாமரை மலர் பவ்வ வண்ணன் - கடல் வண்ணனாகிய திருமால்.