|
பொ-ரை: அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள் தோறம் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும், தொகத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக. கு-ரை: அக்கு - அக்குமணிமாலை என்புமாம். அது என்ற ஆய்தக்குறியீடு இல் புக்கு - பல வீடுகளுக்கும் சென்று பல்பலி - பலவகையான பிச்சைகள் தேரும் - ஆராய்ந்து கொள்ளும் புராணன் - பழையவன் நக்கு - இகழ்ந்து சிரித்து புகேன் மின் - புகாதீர்கள் தொக்க வானவர் - கூட்டமர்ய்கூடிய தேவர்களால்.
|