|
பொ-ரை: இடபத்தின்மீது ஏறியும், இல்லங்கள் தோறம் பலி ஏற்பவரும், சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும், ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக. கு-ரை: இல்பலி - வீடுகளிற் பிச்சை ஏற்பவர் - கொள்பவர் அடவி - இடுகாடு, ஐந்தலைப் படவம் - ஐந்து தலைப்படங்களை உடைய அரை ஆர்த்த - இடையிலே கட்டிய கடவிராய் கடமை உடையவராக. |