|
பொ-ரை: வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன், இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும், பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான். கு-ரை: இயக்கர் - கந்தருவர். கின்னரர் - அசுவமுகமும் நரசரீரமும் உள்ளவர். கின்னரம் என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். தானவர் - அசுரர். நயக்க - விரும்ப. ஆழியான் - சக்கிராயுதத்தை உடையவன். மயக்கம் எய்தவன் - அடிமுடி காணாது மயங்கச் செய்தவன். மால்எரி - பெரிய நெருப்பு. விகிர்தன் - வேறுபாடில்லாதவன். |