பாடல் எண் : 97 - 27
அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
றுழலும் மூவெயி லொள்ளழ லூட்டினான்
தழலுந் தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.
27
பொ-ரை: இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும், வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல்ஊட்டியவனும் எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திரமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டறக்ரியவனுமாவான்.
கு-ரை: அழல் அம்கையினன் - நெருப்பை ஏந்திய அழகிய கையையுடையவன், அந்தரத்து - ஆகாயத்தில் ஓங்கி நின்று - உயர்ந்து பறந்து நின்று உழலும்- திரியும் தழலும் - நெருப்புப்போல் சிவந்திருக்கும், தாமரையானோடு - திருமாலோடு தாவினான்-அன்னமாய்ப் பறந்து சென்ற பிரமன் கழல்-திருவடி.