|
பொ-ரை: தன்னுடலிற்பாற் பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் அனைத்தும் ஆதி ஆகியவன் தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்டமுடியை உடைய புண்ணியன். கு-ரை: ஆதியாயவன் - முதல்வானானவன் ஆரும் இலாதவன்- தந்தை தாய் யாரும் இல்லாதவன் போது - மலர் புனை - அலங்கரித்த பரஞ்சுடர் - மேலான ஒளி சோதியுட் சோதியாய் நின்ற சோதி - ஒளியாயும் ஒளிஉள் ஒளியாயுமிருப்பவன். |