முகப்பு |
தொடக்கம் |
|
பாடல் எண் : 97 - 30 |
இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன் றலங்க லோடுட னேசெல வூன்றிய நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும் வலங்கொண் டேத்துவார் வானுல காள்வரே.
|
|
|
30 |
|
பொ-ரை: இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர். கு-ரை: ஈரைந்து பத்தும் - இருபது தோள்களும் நாடொறும் - தினந்தோறும் தினந்தோறும் வணங்குதலின் இன்றியமையாமை குறித்தது. |
|
|