|
பொ-ரை: பொந்து போல்வதாகிய உடலிற்புகுந்து அதன் கட்டினை நீக்கப் புகுந்திடும் தந்தையும், தீப்போன்ற மேனியை அத்தெளிவு வாய்த்த எந்தையும் ஆகி நின்ற பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது. கு-ரை: பொந்தை - பொய் புக்குநீக்க - முயன்றுநீக்க பொந்தையை - பொய்யாகிய உடலின்கண். புக்கு - புகுந்து நீக்கப் புகுத்திடும்- நாமே அவனை நீக்கவும் நீங்கானாய் உடலில் சென்று புகும். தழல் - நெருப்பு எந்தை - என்தந்தை. |