|
பொ-ரை: அம்மானை , அமுதே இன்னமுதே என்று தத்துவத்தை அறிந்த அடியார் தொழும் நம் தலைவனும் செம்மையாகிய பெருமை மிக்க நிறம்போல்தாகிச் சிந்தையுள் இருக்கும் எம்மானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது. கு-ரை: அம்மானை - தலைவனை அமுதின் அமுதே அமுதத்தினும் மேலான அமுதம் போன்றவனே தம்மானை - தனக்குத் தானே தலைவனை தத்துவத்து அடியார் - தத்துவங்களை அறிந்த அடியவர்கள் செம்மானநிறம் - செம்மையான நிறம். |