பாடல் எண் : 98 - 7
வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
கொன்றா னைக்குணத் தாரே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
7
பொ-ரை: புலன்கள் ஐந்தும் வென்றவனும் என் தீய வினைகளைக் கொன்றவனும், குணத்தால் வணங்கிட நன்றாக நல்லமனத்தில் வைக்கும் ஞானம் என்னும் ஒப்பற்ற பொருளை உடையானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
கு-ரை: புலனைந்தும் வென்றானை என்க. குணத்தாலே வணங்கிட - நற்குணங்களினால் வணங்க நன்றா நன் மனம் - நன்றாகிய நல்ல மனத்தின்கண். ஞானம் வைத்திடும் - அறிவொளியை உண்டாக்கித் தரும் ஒன்றானை ஒரு வடிவாய் விளங்குபவனை ஞானமாகிய ஒன்றினால் அறியப்படுபவனை.