|
பொ-ரை: பட்டர் ஆயினும், சாத்திரங்கள் பல கேட்பினும், இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும், எட்டும் ஓன்றும் இரண்டும் அறிந்தாலும் என்ன பயன்? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம். கு-ரை: பட்டர் -குருக்கள். இட்டும் - கொடைத்தொழில் செய்தும். அடுதல் - விருந்து சமைத்தல். ஈதொழில் - அடியார்களுக்குக் கொடுக்கும் தொழில். பூணில் என் - மேற்கொண்டால் என்ன எட்டும் அதனோடு ஓன்றும் இரண்டும் என்க. இட்டம் ஈசன் எனாதவர்க்கு - விருப்பம் ஈசனிடத்து உண்டு என்று சொல்லாதவர்க்கு. |