|
பொ-ரை: வேதம் ஓதினாலும், வேள்விகள் செய்தாலும், நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும், ஆறங்கங்களை ஓதி உணர்ந்தாலும் என்ன பயன்? ஈசனை உள்குபவர்க்கு அன்றிமற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம். கு-ரை: நித்தல் - நாடோறும். பயிற்றில் என் - பயின்றால் என்ன பயன் விளைக்கும். இல்லை - அருள் இல்லை என்க. |