பாடல் எண் : 99 - 5
காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென் பார்க்கன்றி யில்லையே.
5
பொ-ரை: காலையில் சென்று கலந்து நீரில் முழ்கினாலும், வேளைகள் தோறும் விதிவழிநின்றாலும், ஆலை போன்று வேள்வி அடைந்து வேட்பிலும் என்னபயன்? உள்ளம் பொருந்த இறைவன் என்பார்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
கு-ரை: காலை சென்று - சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னுள்ள காலைப்போதிலேயே சென்று. கலந்து - தண்ணீரோடுகூடி. வேலைதோறும் - இடந்தோறும். விதிவழி - நீதி நூல் வழியே. நிற்கில்என் - ஓழுகினால் விளையும் பயன்யாது? ஆலை - வேள்வி செய்யுமிடம். ஏல - மனம்பொருந்த.