பாடல் எண் : 99 - 8
நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலன்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே.
8
பொ-ரை: நன்கு தவம்நோற்றாலும், உண்ணாவிரதம் கிடப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், சென்று நீரிற்குளித்துத் திரிந்தாலும் என்ன பயன்? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி பற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
கு-ரை: நோற்றல் - தவம் செய்தல். குன்றம் - மலை. இருந்தவம் - பெரியதவம்.