|
பாடல் எண் :1085 | மாணி பால்கறந் தாட்டி வழிபட நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவென் ஆணியைச் செம்பொ னம்பலத் துள்நின்ற தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ. |
| 4 | பொ-ரை: பிரமசாரியாகிய சண்டேசர் பசுக்களின் பாலைக்கறந்து அபிடேகித்து வழிபட நீண்ட உலகம் பலவற்றையும் ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தவன்; பொன் உரையாணி போன்றவன்; செம்பொன்னம்பலத்துள் நின்று ஆடும் செம்பொருள். அவனைத் தனியனாய நான் மறவேன். கு-ரை: மாணி - பிரமசாரி, சண்டேசர். நீள் + உலகு - நீணுலகு. (சிவஞான - காப்பு உரை). ஆணி - பொன்னின் மாற்று அறிதற்கு வைத்திருக்கும் மாற்றுயர்ந்த பொன்; தனக்கு உவமையில்லாதான் என்னும் கருத்தில் இறைவனுக்குப் பெயராயிற்று. தாணு - நிலை பெற்றவன். ஸ்தாணவே நம: என்பது இறைவனது நூற்றியெட்டுப் போற்றிகளுள் ஒன்று. |
|