|
பாடல் எண் :1119 | கண்டந் தான்கறுத் தான்கால னாருயிர் பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் அண்டத் தோங்குமண் ணாமலை கைதொழ விண்டு போகுநம் மேலை வினைகளே. |
| 8 | பொ-ரை: திருநீலகண்டரும், கூற்றுவன் உயிரைப் பண்டு கால் கொண்டு பாய்ந்த பரமனாரும் ஆகிய பெருமானுக்குரிய அண்டமுற ஓங்கி நிமிர்ந்த திருவண்ணாமலையைக் கைகளாற்றொழுதால் நம் மேலை (பழைய) வினைகள் நம்மைவிட்டு நீங்கும். கு-ரை: காலனார் - எனப் பிரிப்பினும் அமையும். பன்மை விகுதி இழிவு குறித்து நின்றது. |
|