|
பாடல் எண் :1120 | முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின் அந்தி வாயொளி யான்றனண் ணாமலை சிந்தி யாவெழு வார்வினை தீர்த்திடும் கந்த மாமலர் சூடுங் கருத்தனே. |
| 9 | பொ-ரை: முந்துறச்சென்று, மாலைச்செவ்வானன்ன மேனி உடையானுடைய திருவண்ணாமலையை மூன்று பொழுதும் வணங்குவீர்களாக; அத்திருவண்ணாமலையைச் சிந்தித்தபடி துயிலெழுவார் வினைகளை, நறுமணமுடைய மலர்களைச் சூடும் தலைவனாகிய பெருமான் தீர்ப்பான்.கு-ரை: முந்திச்சென்று - முற்படச்சென்று. விரைந்து இன்றேபோய் என்றபடி. முப்போதும் - மூன்றுகாலத்தும். அந்தி வாயொளியான் - அந்திக் காலத்தே தோன்றும் செவ்வொளி வண்ணத்தான். `செவ்வானன்னமேனிழு (கடவுள் வாழ்த்து) சிந்தியா - மணத்தால் சிந்தியா நின்று. எழுவார் - துயிலெழுவார். கந்தமாமலர் - மணமுள்ள சிறந்த மலர். கருத்தன் - எல்லாவற்றிற்கும் கருத்தாய் விளங்குபவன். |
|