|
பாடல் எண் :1121 | மறையி னானொடு மாலவன் காண்கிலா நிறையு நீர்மையுள் நின்றருள் செய்தவன் உறையும் மாண்பினண் ணாமலை கைதொழப் பறையும் நாஞ்செய்த பாவங்க ளாகவே. |
| 10 | பொ-ரை: பிரமனும் திருமாலும் காண்கிலாதவனும், எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையும் மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கைகளாற்றொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும். கு-ரை: மறையினான் - நான்குவேதங்களை ஓதும் தொழில் பூண்ட பிரமன். நிறையும் நீர்மை - எங்கும் நிறைந்த தன்மை `இங்குற்றேனென்று லிங்கத்தே தோன்றினான்' என்பர் பின்னும். பறையும் - கெடும். |
|