|
பாடல் எண் :1125 | விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல் உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை அடைவர் போலரங் காகவா ரூரரே. |
| 4 | பொ-ரை: திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர்; வெண்தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார்; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர். கு-ரை: சீரை - கிழிந்த சீலை அல்லது மரவுரி. |
|