பாடல் எண் :1127
பண்ணி னின்மொழி யாளையொர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலுமா ரூரரே.

6
பொ-ரை: பண்ணையொத்த இனிய மொழியாளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விசும்பில் விளங்கும் பிறையினைச் சூடி, திருநீற்றுப் பொடியினைத் திருமேனியிற் பூசிச் சுடலையினை அண்மித் திருவாரூர்ப் பெருமான் ஆடுவர்.
கு-ரை: பண்ணின் இன்மொழியாள் - `பண்ணினேர் மொழியாளுமைழு (தி.5.ப.10.பா.1) இசையினிமையை ஒத்த மொழியை உடையவள். பாகமா - இடப்பாகத்தேகொண்டு என்னும் பொருளது. விண்ணினார் விளங்கும் மதி - விண்ணிலே பொருந்தி விளங்கும் மதி. சுண்ணநீறு - கலவைச் சந்தனம்போலக் கொள்ளப் படும் திருநீறு. அண்ணி - நெருங்கி.