|
பாடல் எண் :1146 | பரவி நாளும் பணிந்தவர் தம்வினை துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம் குரவம் நாறுங் குழலுமை கூறராய் அரவ மாட்டுவர் போலன்னி யூரரே. |
| 3 | பொ-ரை: நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல்வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும், தம்மிடப்பாகத்தில் குரவு நறுமணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும், அரவம் ஆட்டு பவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே. கு-ரை: பரவி -இறைவன் புகழை விரித்தோதி. நாளும் - நான் தோறும். பணிந்தவர்தம் - வணங்கியவர்களுடைய. துரவையாக - இல்லையாக. துடைப்பவர் - போக்குபவர். குரவம் - குரவமலர். குழல் - கூந்தல். கூறராய் - ஒருகூற்றிற் கொண்டவராய். |
|